மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
06-Jul-2025
விருதுநகர் : சாத்துார் அருகே நென்மேனி புனித இஞ்ஞாசியார் சர்ச் 136வது திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூலை 30ல் தேர்பவனி நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை திருநெல்வேலி ரெங்கசமுத்திரம் அருட்பணியாளர் வினோத் பால்ராஜ், சிதம்பராபுரம் அருட்பணியாளர் அந்தோணி ராஜ், பாதிரியார் காந்தி உட்பட பலர் இஞ்ஞாசியார் உருவம் பொறித்த கொடிஏற்றினர். இதன் முக்கிய நிகழ்வான நற்செய்தி கூட்டம் ஜூலை 30 இரவு 7:00 மணிக்கு சர்ச் வளாகத்தில் அருட்பணியாளர்கள் சகயஜான், ரொனால்டு தலைமையில் திருப்பலி, மறையுரை நடக்கிறது. அன்று இரவு 11:30 மணிக்கு மதுரை பேராயர் அந்தோணி சவரி முத்து தலைமையில் ஆடம்பர திருவிழா, கூட்டு திருப்பலி, மறையுரை நடக்கிறது. மேலும் மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. அன்று காலை 11:00 மணிக்கு நன்றி திருப்பலி நற்கருணை ஆசீருடன் கொடியிறக்கம் நடக்கிறது.
06-Jul-2025