வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவையெல்லாம் ஒரு காலத்தில் யானைகளின் வலசை பகுதியாக இருந்தவைதான். மனிதன் ஆக்ரமித்ததால் வந்த வினை
ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதியில் சுற்றித்திரிந்த கரும்பு கொம்பன் யானை தற்போது கரும்பு தோட்டங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருவதால், நகருக்குள் வந்துவிடுமோ என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக செண்பகத்தோப்பு மலையடிவார தோப்புகளில் ஒரு யானை புகுந்து மா, தென்னை, வாழை தோப்புகளையும் சேதப்படுத்தி வருகிறது. இதையடுத்து வனத்துறையினரும் மாலை நேரங்களில் கண்காணித்து வருகின்றனர். இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டம் இருந்தால் வெடி வெடித்து விரட்டப்படுகிறது.முதலில் மலையடிவார தோப்புகளில் மட்டுமே நடமாடி வந்த யானை தற்போது பேயனாற்றை கடந்து அத்தி துண்டு, குறவன் குட்டை வரை யானை நடமாட்டம் உள்ளது. மாலை 5:00 மணிக்கு மேல் தோப்புகளுக்கு வரும் யானை இரவு வரை பயிர்களை சேதப்படுத்தி அதிகாலை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது.இதுவரை மா, தென்னை, வாழைகளை சேதப்படுத்தி வந்த யானை தற்போது குறவன் குட்டை பகுதியை கடந்து ஆட்டுப்பண்ணை வரை சென்று கரும்புகளை அதிகளவில் சேதப்படுத்தி வருகிறது. இதனால் இந்த யானையை கரும்பு கொம்பன் யானை என விவசாயிகள் அழைக்க துவங்கியுள்ளனர்.இது வரை மனித உயிருக்கு சேதம் எதுவும் ஏற்படாத நிலையில் தற்போது குறவன் குட்டை, பந்த பாறை, அத்தி துண்டு பகுதிகளையும் கடந்து ஸ்ரீவில்லிபுத்துார், மம்சாபுரம் நகர் பகுதியை நோக்கி நடந்து செல்வதால் மக்களும், விவசாயிகளும் அச்சமடைந்துள்ளனர். . வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து வந்தும் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முடியவில்லை.வழக்கமாக தென்படும் யானையை போல் இல்லாமல் நீண்ட தந்தத்துடன் நடமாடுவதால் இது கேரளாவில் இருந்து இடம் பெயர்ந்த யானையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. யானை நடமாட்டத்தால் விவசாயிகளும், தோப்பு உரிமையாளர்களும் பயமின்றி தோப்புகளுக்கு வந்து செல்ல முடியவில்லை. இதற்கு மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
இவையெல்லாம் ஒரு காலத்தில் யானைகளின் வலசை பகுதியாக இருந்தவைதான். மனிதன் ஆக்ரமித்ததால் வந்த வினை