ஸ்ரீ மீனாட்சி பேன் ஹவுஸின் புதிய கிளை துவக்க விழா
சிவகாசி: சிவகாசி தெற்கு ரத வீதியில் புதுப்பிக்கப்பட்ட காக்கா வீட்டில் ஸ்ரீ மீனாட்சி பேன் ஹவுஸின் சிவகாசி கிளை ஷோரூம் தொடக்க விழா நடந்தது. அசோகன் எம்.எல்.ஏ.. திறந்து வைத்தார். மேயர் சங்கீதா அப்ளையன்ஸ் ஜோன் பிரிவை திறந்து வைத்தார். ராஜ கிரகம், வெங்கடேஸ்வரா பேப்பர் உரிமையாளர் வெங்கடேஸ்வரி பாலாஜி, ஸ்ரீ மீனாட்சி பேன் ஹவுஸ் இயக்குனர் அபிராமி சரவணன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். காளீஸ்வரி குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் இயக்குனர் செல்வராஜன் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.திறப்பு விழாவில் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் கிளை மேலாளர்கள், விற்பனை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மீனாட்சி பேன் ஹவுன்சின் நிர்வாக இயக்குனர் சரவணன், இணை இயக்குனர்கள் கோகுல நம்பி, மனோஜ் நன்றி கூறினர். நிர்வாகத்தினர் கூறுகையில் ,திறப்பு விழாவை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்குபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் பரிசுகள் வழங்கப்படுகின்றது. மேலும் விபரங்களுக்கு என்ற அலைபேசி 96777 34446 எண்ணை தொடர்பு கொள்ளவும்.