உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி.,யில் அதிகரிக்கும் பிளக்ஸ்

ஸ்ரீவி.,யில் அதிகரிக்கும் பிளக்ஸ்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் அனுமதி இல்லாமல் பிளக்ஸ் போர்டுகள் வைக்கும் கலாசாரம் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். நகரில் ராமகிருஷ்ணாபுரம் முதல் பஸ் ஸ்டாண்ட் வரையிலும், சர்ச் சந்திப்பிலும், நான்கு ரத வீதிகளிலும், ரோடுகளின் வளைவு பகுதிகளிலும் வாகன ஓட்டிகளின் பார்வையை மறைக்கும் வகையிலும், வியாபார நிறுவனங்களை மறைக்கும் வகையிலும் அரசியல் கட்சிகள் பொதுநல அமைப்புகள், தனி நபர்கள் பிளக்ஸ் போர்டு வைப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தெரு பகுதியில் இருந்து மெயின் ரோட்டுக்கு வரும் டூ வீலர் வாகன ஓட்டிகள் விபத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது. இதனை போலீசார் கண்கூடாக பார்த்தும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். நகராட்சி, போலீஸ் துறையின் உரிய அனுமதி இல்லாமலும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகளை போலீசார் அகற்ற வேண்டும் என ஸ்ரீவில்லிப்புத்துார் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !