சுதந்திர தின கொண்டாட்டங்கள்
காரியாபட்டி: காரியாபட்டியில் பா.ஜ.,வினர் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய தலைவர் ராஜபாண்டி முன்னிலை வகித்தனர். பொறுப்பாளர்கள் விஜயரகுநாதன், ராமலிங்கம், மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சமம் சுய உதவி குழு கூட்டமைப்பு வளாகத்தில் எஸ்.ஐ., சுப்பிரமணியன் கொடியேற்றினார். நிறுவனர் ஞானபாக்கியம், செயலாளர் பாப்பாத்தி, ஒருங்கிணைப்பாளர்கள் கல்பனா கலந்து கொண்டனர். நரிக்குடி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., முகைதீன் அப்துல் காதர் கொடியேற்றினார்.