உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கண்மாய் துார்வாரும் பணி துவக்கி வைப்பு

கண்மாய் துார்வாரும் பணி துவக்கி வைப்பு

நரிக்குடி: நரிக்குடி கட்டனுார் கண்மாய் ரூ.2.86 கோடி, நரிக்குடி கண்மாய் ரூ.85 லட்சத்தில் துார்வாரும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்து பேசியதாவது: கண்மாய் புனரமைப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு துார்வார நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் 3 ஆயிரத்து 460 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பாசன வசதி பெறும். கண்மாய்களில் தண்ணீரை தேக்கினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு எட்ட முடியும். மக்களின் வாழ்க்கைத் தரம், கால்நடை வளர்ப்பு மேம்பாடு அடையும், என்றார். இதைத்தொடர்ந்து நரிக்குடி பஸ் ஸ்டாண்டிலிருந்து நரிக்குடி, அ.முக்குளம், புல்வாய்க்கரை வழியாக திருப்புவனம் வரை புதிய வழித்தடத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ