உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வேளாங்கண்ணி ரயில் ஸ்ரீவி.,யில் நின்று செல்ல வலியுறுத்தல்

வேளாங்கண்ணி ரயில் ஸ்ரீவி.,யில் நின்று செல்ல வலியுறுத்தல்

ஸ்ரீவில்லிபுத்துார்: எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் ரயில்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல வேண்டுமென தெற்கு ரயில்வே மேலாளருக்கு எம்.எல்.ஏ. மான்ராஜ் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து வாரந்தோறும் சனி, திங்கள்கிழமைகளில் மதியம் 1:00 மணிக்கு புறப்பட்டு கொல்லம், செங்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு ஒரு ரயில் இயங்குகிறது.இந்த ரயில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் மட்டும் நின்று செல்ல ஸ்டாப்பிங் வழங்கப்படவில்லை. இதனால் கேரளாவில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் பயணிகள் ராஜபாளையத்தில் இறங்கியும், வேளாங்கண்ணியில் இருந்து வரும் பயணிகள் சிவகாசியில் இறங்கியும் பஸ்களில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.எனவே, இந்த ரயிலுக்கு இரு மார்க்கத்திலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல வேண்டுமென எம்.எல்.ஏ. மான்ராஜ் தெற்கு ரயில்வே மேலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை