உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திரவ இயக்கவியல் சர்வதேச மாநாடு

திரவ இயக்கவியல் சர்வதேச மாநாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் கணிதவியல் துறை சார்பில் திரவ இயக்கவியல் பயன்பாடு என்ற தலைப்பில் 3 நாள் சர்வதேச மாநாடு நடந்தது.வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சசி ஆனந்த் முன்னிலை வகித்தார். ஆராய்ச்சி துறை இயக்குனர் பள்ளி கொண்ட ராஜசேகரன் வரவேற்றார். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், ரெட்டப்பா, டீன் ராமலிங்கம், துறைத்தலைவர் காமேஸ்வரி வாழ்த்தினர்.மாநாட்டில் வெளிநாட்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள் பன்னீர்செல்வம், நாகராணி, கட்டா ரமேஷ், ஸ்ரீதர ராவ் குணகலா, விக்டர் ஜாப், சுமோன் சாஹா, கனடா பல்கலைக்கழக பேராசிரியர் ராம்பாலசந்தர் ஆகியோர், திரவ இயக்கவியல் குறித்த தங்கள் ஆராய்ச்சி குறித்து பேசினர்.சென்னை டெலாய்ட் ஷேர்டு சர்வீசஸ் மனித வளை இணை இயக்குனர் ராமச்சந்திரன் மாநாட்டு மலரை வெளியிட்டு பேசினார். பேராசிரியர் கருப்பசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை