/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கல்வி நிதி கொடுக்காததால் ஏழை மாணவர்கள் பாதிப்பு எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி
கல்வி நிதி கொடுக்காததால் ஏழை மாணவர்கள் பாதிப்பு எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி
விருதுநகர்: நிதியை மத்திய அரசு கொடுக்காமல் நிறுத்தி வைப்பதால் ஏழை மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது என விருதுநகரில் எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்தார். மேலும் அவர் கூறியதாவது: புதிய கல்விக்கொள்கைக்கு தமிழக அரசு ஆதரவு வழங்காததால் மாநில அரசுக்கு பங்காக வரவேண்டிய நிதியை மத்திய அரசு கொடுக்காமல் நிறுத்தி வைப்பதால் ஏழை மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. பா.ஜ.,ஆளும் மாநிலங்களில் முகவரியே இல்லாத கட்சிகளுக்கு ரூ.4200 கோடி நன்கொடைபெறப்பட்டு அந்தப்பணத்திற்கு செலவும் காட்டப்பட்டுள்ளது. முகவரி இல்லாத கட்சிகளை பயன்படுத்தி பா.ஜ.,வளர்ச்சிக்கு அந்த பணம் செலவிடப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக அம்மாநில அரசோ, தேர்தல் கமிஷனோ விசாரிக்கப்போவதில்லை. பா.ஜ.,வின் ஓட்டுத் திருட்டை தேர்தல் கமிஷன் தடுத்தால் இண்டி கூட்டணி வெற்றி பெறும், என்றார்.