உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இருஞ்சிறை - தேளி ரோடு பணிகள் தீவிரம்

இருஞ்சிறை - தேளி ரோடு பணிகள் தீவிரம்

நரிக்குடி: இருஞ்சிறை -- தேளி ரோடு ரூ.4 கோடியில் விரிவாக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நரிக்குடி இருஞ்சிறை -தேளி வழியாக மானாமதுரை, திருப்புவனம், மதுரை, அதேபோல் நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, கமுதி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல மிக முக்கிய ரோடாக இருந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. ஒருவழிப்பாதையாக இருந்ததால் இரு வாகனங்கள் விலகிச் செல்ல கடும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து மானாமதுரை ரோடு சீரமைக்கப்பட்டது. இருஞ்சிறை - தேளி 2 கி.மீ., தூரம் உள்ள ரோடு சீரமைக்காமல் படுமோசமாக இருந்தது. தற்போது ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டு முதற்கட்டமாக பாலங்கள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியை திருச்சுழி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் வெங்கடேஷ் குமார் ஆய்வு செய்தனர். அவர்கள் கூறுகையில் இன்னும் ஓரிரு மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை