உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரேஷன் கடை விழிப்புணர்வு குழு முழுவீச்சில் செயல்படுகிறதா ; மாவட்ட நிர்வாகம் கண்காணிப்பு அவசியம்

ரேஷன் கடை விழிப்புணர்வு குழு முழுவீச்சில் செயல்படுகிறதா ; மாவட்ட நிர்வாகம் கண்காணிப்பு அவசியம்

மாவட்டத்தில் 966 கூட்டுறவு ரேஷன் கடைகளும், 35 நுகர்பொருள் வாணிப கழக ரேஷன் கடைகளும் உள்ளன. இந்த ரேஷன் கடைகளில் முறையாக பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும், அதன் வசதிகளை மேம்படுத்தவும் விழிப்புணர்வு குழு அமைக்க அரசு அறிவுறுத்தியது. மக்கள் குறைகள், தரத்தில் ஏதேனும் பிரச்னை இருப்பின் இந்த குழுக்கள் மூலம் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தலாம். இந்த குழுவில் ஓய்வு அரசு ஊழியர் ஒருவர், எஸ்.சி., பி.சி., பெண் என 5 முதல் 6 பேர் வரை நியமிக்கப்படுவர். மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் முன்பிருந்தே இந்த குழு செயல்பட்டு வந்தாலும், நாளடைவில் அதன் செயல்பாடு மங்கி தான் வந்துள்ளன. இதனால் 2023ல் இக்குழுக்கள் புதிதாக அமைக்கப்பட்டன. புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் இக்குழுக்கள் முழு செயல்பாட்டில் தற்போதும் உள்ளதா என்ற கேள்வி உள்ளது. அவ்வப்போது அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் ஏழை, எளிய மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக இந்த குழுக்கள் எத்தனை புகார்களை அனுப்பி உள்ளது. மேலும் மக்களிடம் இந்த பொருள் இல்லாததால் என்னென்ன சிரமம் என கேட்டு தெரிந்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதா. பல ரேஷன் கடைகளில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. எடையாளர்களே விற்பனையாளர்கள் போல் செயல்பட்டு வருகின்றனர். இதனால் முறைகேடும் நடக்கின்றன. எத்தனை தடுத்தும் குடிமைபொருள் போலீசாரால் இன்றளவும் ரேஷன் அரிசி பதுக்கலை நிறுத்த முடியவில்லை. ஆகவே மாவட்ட நிர்வாகம் ரேஷன் கடை விழிப்புணர்வு குழுக்களை முழு அளவில் செயல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை