உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விவசாயிகள் பயிரிட்ட நிலங்களில் பயிர் கணக்கெடுப்பு முறையாக எடுக்கப்படுவது.. அவசியம்

விவசாயிகள் பயிரிட்ட நிலங்களில் பயிர் கணக்கெடுப்பு முறையாக எடுக்கப்படுவது.. அவசியம்

விவசாயிகள் பயிரிட்ட நிலங்களில் பயிர் கணக்கெடுப்பு முறையாக எடுக்கப்படுவது இல்லை. ஒரு சில பயிர்களுக்கு ஒரு பகுதியில் காப்பீடு வழங்கப்படுகிறது. அதே பயிருக்கு மற்றொரு பகுதியில் காப்பீடு வழங்கப்படுவது இல்லை. நரிக்குடி அருகே சாலை மறைக்குளம், தேனூர், சித்தநேந்தல், பனையூர், குமிளங்குளம், பரளச்சி, பூலாங்கால், தொப்புலக்கரை, நெடுங்குளம் என 40 க்கும் மேற்பட்ட கிராமங்களில் கரும்பு விளைவிக்கப்படுகிறது. இங்கு கரும்பு பயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் கரும்பிற்கு இன்சூரன்ஸ் இல்லை என்கின்றனர். பயிர் கணக்கெடுப்பில் குறைவான பரப்பளவில் கரும்பு விளைவிக்கப்பட்டுள்ளது என விவசாய அதிகாரிகள் ஒதுங்கி கொள்கின்றனர். முறையான கணக்கெடுப்பு எடுக்கவில்லை என்பதே விவசாயிகளின் புகாராக உள்ளது. திருச்சுழி அருகே பண்ணை மூன்றடைப்பு, புதுப்பட்டி, வடபாலை, தென்பாலை பகுதிகளில் வாழை பயிரிடப்பட்டு வருகிறது. இதற்கான கணக்கெடுப்பு முறையாக இல்லாததால் வாழைக்கு காப்பீடு இல்லை என்கின்றனர். இது போன்று மாவட்டத்தில் பல பகுதிகளில் இந்த நிலைமையில் தான் உள்ளது. விவசாயிகள் உரிய சாகுபடி செய்தும் முறையான கணக்கெடுப்பு இல்லாததால் காப்பீடு செய்ய முடியவில்லை. அரசு நிவாரணமும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் முறையான கணக்கெடுப்பு நடத்தவில்லை. மேலும் பல விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டம் பற்றி தெரியவில்லை. முறையான அணுகுமுறையும் இல்லை. பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அவர்கள் பயிரிட்ட பயிர்களை முறையான கணக்கெடுப்பு நடத்தியும் அரசும் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பது பாதிப்படைந்த விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து காவேரி குண்டாறு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராம் பாண்டியன்: அரசு பயிர்களுக்கு முறையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும். முறையான கணக்கெடுப்பு நடத்தினால் காப்பீடு பெற தகுதி ஆகிவிடும். காப்பீடு திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள், விவசாயியும் குறைந்தபட்ச தொகையை செலுத்த வேண்டும். இந்த விஷயத்தில் மாநில அரசும் ஒரு தொகை செலுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக காப்பீடு விஷயத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறது. ஒரு சில பயிர்களுக்கு மட்டும் கணக்கெடுப்பு நடத்தி மற்ற பயிர்களை புறக்கணிக்கிறது. அனைத்து பயிர்களுக்கும் இன்சூரன்ஸ் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை