உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வெம்பக்கோட்டையில் மாற்றுப்பாதையை இரு வழிசாலையாக அகலப்படுத்த எதிர்பார்ப்பு

வெம்பக்கோட்டையில் மாற்றுப்பாதையை இரு வழிசாலையாக அகலப்படுத்த எதிர்பார்ப்பு

சாத்துார், - சிவகாசி கழுகுமலை ரோட்டில் வெம்பக்கோட்டை அருகே புதியபாலம் கட்டும் வேலை நடைபெறுவதால் அருகில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுபாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது . எனவே மாற்றுப்பாதை ரோட்டை இரு வழிச்சாலையாக மாற்ற வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.வெம்பக்கோட்டை அருகே செல்லும் சிற்றாறு ஓடை பாலத்திற்கு மீது புதிய மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சிவகாசி கழுகுமலை மெயின் ரோடான இந்த பகுதியில் 24 மணி நேரமும் கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.மேலும் சிமென்ட், எம்சாண்ட் ஏற்றி வரும் லாரிகளும் அதிக அளவில் சென்று வருவதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. சிற்றாறு மீது மேம்பாலம் கட்டுவதற்காக தற்போது பொதுப்பணித்துறையினர் இந்த பகுதியில் தடை இன்றி வாகனங்கள் சென்று வருவதற்காக மாற்று பாதையை அமைத்துள்ளனர்.இதில் ஒரு வாகனம் சென்றால் எதிர் திசையில் வரும் வாகனம் விலககூடவசதி இல்லை. இரு சக்கர வாகனஓட்டிகளும் லோடு ஆட்டோக்களும் இருபுறமும் காத்திருந்து ஒரு வாகனம் சென்றபின்பே செல்லவேண்டியநிலை உள்ளது.இதன் காரணமாக இந்தபகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எதிரில் வரும் வாகனங்களுக்கு வழி விடுவதற்கு வழியின்றி இரு சக்கரவாகனத்தில் செல்பவர்கள் திணறும் நிலை உள்ளது. எனவே இரு வழிப் பாதையாக்கவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை