உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு திரி பதுக்கல் அதிகரிப்பு ஆய்வுகளை அதிகரிப்பது அவசியம்

பட்டாசு திரி பதுக்கல் அதிகரிப்பு ஆய்வுகளை அதிகரிப்பது அவசியம்

விருதுநகர்: விருதுநகரை சுற்றியுள்ள ஊரகப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பட்டாசு தயாரிக்கப்படும் பயன்படும் வெள்ளை, கருப்புத் திரிகளை பதுக்குவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து முறையான ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி, முதலிப்பட்டி, வாடியூர், ஆமத்துார், வெள்ளூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பட்டாசு தயாரிப்பு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் தற்போது பட்டாசு தயாரிப்பு பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் வீடுகள், கடைகள், கோடவுன்களின் அருகே தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பது, மூலப்பொருட்களை பதுக்குவது, பட்டாசு தயாரிக்கப்படும் வெள்ளை திரிகள், கருப்புத் திரிகளை பதுக்கி வைத்திருப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பட்டாசு ஆலைகளை மட்டும் ஆய்வு செய்வதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பதுக்கல் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக ஆய்வுகளை முறையாக செய்யாததால் சர்வசாதாரணமாக சட்டவிரோத தயாரிப்பு, பதுக்கல் ஆகியவை நடக்கிறது. ஊரகப்பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்ய தயக்கம் காட்டுவதால் வீட்டில் பட்டாசு தயாரிப்பு மூலப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்து யாருக்காவது படுகாயம், உயிரிழப்பு நடந்த பின்புதான் ஆய்வுபணிகளை தீவிரப்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே திரிகளை பதுக்குபவர்களை கண்டறிந்து விபத்திற்கு முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ