நிரம்பியது எல்லிங்கநாயக்கன்பட்டி கண்மாய்
விருதுநகர் : விருதுநகர் அருகே எல்லிங்கநாயக்கன்பட்டி கண்மாய்க்கு அதிக அளவில் தண்ணீர் வந்ததால் நிரம்பியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.விருதுநகர் அருகே எல்லிங்கநாயக்கன்பட்டியில் இருக்கும் கண்மாய் 2023 டிசம்பரில் பெய்த கனமழையால் இரண்டு முறை நிரம்பியது. அதன் பின் நீர்வரத்து ஓடைகளில் தண்ணீர் வந்ததால் கண்மாயில் நீர் இருப்பு நீடித்து கொண்டிருந்தது.கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் நீர்வரத்து ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து கண்மாய்கள் நிரம்ப துவங்கியது. இதே போல எல்லிங்கநாயக்கன்பட்டி கண்மாய்க்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்தது. தற்போது கண்மாய் முழுகொள்ளளவு எட்டி நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. மேலும் நடப்பாண்டு முதல் நாளிலேயே கண்மாய் நிரம்பியதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனைடையும்.