உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவது, தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செல்வகணேசன், முத்தையா, அரசு ஊழியர் சங்க பாண்டித்துரை தலைமை வகித்தனர். மாவட்ட அளவில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி