உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இயற்கை முறையில் மல்லிகை பூ சாகுபடி பயிற்சி

இயற்கை முறையில் மல்லிகை பூ சாகுபடி பயிற்சி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் மல்லிகை பூவில் ஊக்கிகளின் செயல் திறனை மதிப்பிடுதல் பயிற்சி நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி ரமேஷ்துவக்கி வைத்தார். வேளாண்மை துணை இயக்குனர் லதா, தோட்ட கலைத்துணை இயக்குனர் சுப வாசுகி சிறப்புரை யாற்றினர். உதவி பேராசிரி யர் கிருஷ்ண சுரேந்தர், கோயம்புத்தூர் இயற்கை வள மேலாண்மை இயக்ககம் இயக்குனர் பாலசுப்பிரமணியம், மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம், மண்டல ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் தொழில்நுட்பங்கள் பற்றியும் பேசினர். மல்லிகையின் வகைகள், நோய், பூச்சி தாக்கத்தின் அறிகுறிகள், மல்லிகை மதிப்பு கூட்டு பொருட்கள், வெளிநாடுகளுக்கு மல்லிகை பூவை ஏற்றுமதி செய்வதற்கான தொழில்நுட்பங்கள் கண்காட்சி வைக்கப்பட்டு இருந்தது. பேராசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை