உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நகை திருட்டில் ஈடுபட்டவர் கைது

நகை திருட்டில் ஈடுபட்டவர் கைது

காரியாபட்டி; காரியாபட்டியை சேர்ந்த அழகிய மணவாளன். கடந்த மாதம் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். அப்போது வீட்டு கதவை உடைத்து பீரோவில் இருந்த 15 அரை பவுன் நகையை திருடி சென்றனர். காரியாபட்டி போலீசார் விசாரித்ததில், மதுரை கல்லுமேட்டை சேர்ந்த ராமச்சந்திரன் 39, அழகிய மணவாளன் வீட்டு அருகே வாடகைக்கு குடியிருந்து, கொத்தனார் வேலைக்குச் சென்று வந்தார். இந்நிலையில் அவர் வெளியூர் சென்றிருந்ததை அறிந்து, வீட்டு கதவை உடைத்து பீரோவில் இருந்த நகையை திருடியது தெரிந்தது. அவரை கைது செய்து, நகையை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ