மேலும் செய்திகள்
விளையாட்டு மையம் திறப்பு
17-Sep-2025
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பணியாணை வழங்கினார். தொழிலாளர் நலன் , திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு ,பயிற்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது. இதற்கு கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் சண்முகசுந்தர், மதுரை மண்டல கல்லூரிகளின் கல்வி இணை இயக்குனர் பொன் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர். முதல்வர் உமாராணி வரவேற்றார். முகாமில் கலந்து கொண்டு தேர்வு பெற்றவர்களுக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பணி ஆணை வழங்கினார். நிகழ்ச்சியில் 75 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம், துணைத் தலைவர் பழனிச்சாமி, நகராட்சி கமிஷனர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
17-Sep-2025