மேலும் செய்திகள்
கோவில்களில் கார்த்திகை தீபம் சொக்கப்பனை ஏற்றல்
14-Dec-2024
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் திருக்கார்த்திகை தீப விழாவையொட்டி கோயில்கள், வீடுகளில் தீபமேற்றி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.நேற்று திருக்கார்த்திகை தீப விழா முன்னிட்டு கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அனைத்து கோயில்களும் தீப விளக்குகளால் பளிச்சிட்டன. வீடுகள் தோறும் தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர். விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி கோயில், பராசக்தி மாரியம்மன் கோயில், மீனாட்சி சொக்கநாதர் கோயில், ராமர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். மீனாட்சி சொக்கநாதர் கோயில், வாலசுப்பிரமணியசுவாமி கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டன. இதே போல் காரியாபட்டி, சிவகாசி, சாத்துார் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடுகள் நடத்தப்பட்டது.ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி, பழனி ஆண்டவர், பெரிய மாரியம்மன், நத்தம்பட்டி வழி விடு முருகன், மூவரை வென்றான் மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில்களில் திருக்கார்த்திகை வழிபாடு நேற்று கொட்டும் மழையிலும் சிறப்புடன் நடந்தது.நேற்று மாலை 5:00 மணிக்குமேல் அந்தந்த கோயில்களில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.மாலை 6:00 மணிக்குமேல் மழையின் தாக்கம் குறைந்ததால் கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை திருச்சுழி கோயில்களின் கார்த்திகை தீப திருவிழா நடந்தது.அருப்புக்கோட்டை ஆயிரம் கண் மாரியம்மன் கோயில், பழனி ஆண்டவர் கோயில், சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில், அமுதலிங்கேஸ்வரர் கோயில், வால சுப்பிரமணியர் கோயில், திருச்சுழி திருமேனிநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் கார்த்திகை தீப விழா நடந்தது. சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கோயில்களில் பெண்கள் விளக்குகள் ஏற்றினர். குத்து விளக்கு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
14-Dec-2024