உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கே.கரிசல்குளம் கண்மாய் வரத்து கால்வாயில் நிரந்தர தடுப்பணை கட்ட வலியுறுத்தல்

கே.கரிசல்குளம் கண்மாய் வரத்து கால்வாயில் நிரந்தர தடுப்பணை கட்ட வலியுறுத்தல்

காரியாபட்டி: காரியாபட்டி கே.கரிசல்குளம் கண்மாய்க்கு வரத்துக்கால்வாய் வழியாக வரும் தண்ணீரை வேறு கண்மாய்க்கு திறந்து விடக்கூடாது என அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வரத்துக் கால்வாயில் நிரந்தர தடுப்பணை கட்ட வேண்டும் என வலியுறுத்தினர். காரியாபட்டி கே.கரிசல்குளம் கண்மாய்க்கு, மதுரை மாவட்டம் மருதங்குடி, இலுப்பைகுளம், வேப்பங்குளம் காட்டுப் பகுதியில் பெய்யும் மழை நீரும், இலுப்பைகுளம் கண்மாய் நிறைந்து வெளியேறும் உபரி நீரும் வரத்துக் கால்வாய் வழியாக வந்து சேரும். சென்னம்பட்டி கால்வாய் ஏற்படுத்தப்பட்ட பின் இந்த வரத்துக்கால்வாயை கண்டுகொள்ளவில்லை. முறையாக தூர்வாராததால் ஆங்காங்கே மேடும், பள்ளமுமாக ஆகின.இந்நிலையில் சென்ற ஆண்டு இலுப்பகுளம் கண்மாய் நிறைந்து வரத்துக் கால்வாயில் தண்ணீர் வந்தது. பாம்பாட்டி கிராத்தினர் வரத்துக்கால்வாயை திறந்து அக்கிராம கண்மாய்க்கு தண்ணீரை கொண்டு சென்றனர். இதற்கு கே.கரிசல்குளம் கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு கிராமத்தினருக்கிடையே பிரச்னை ஏற்பட்டு பின் சமாதானப்படுத்தப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் உபரி நீர் வரத்துக் கால்வாய் வழியாக வந்ததை, பாம்பாட்டி கிராமத்தினர் திறந்தனர்.கே.கரிசல்குளம் கண்மாய்க்கு மட்டுமே சொந்தமான வரத்துக் கால்வாயில் வரும் தண்ணீரை வேறு கண்மாய்க்கு திறந்து விட உரிமையில்லை என கூறி, தண்ணீர் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காரியாபட்டி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.உடனடியாக தண்ணீர் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும், வரத்துக் கால்வாயில் பாம்பாட்டி கண்மாய்க்கு செல்லும் வழியில் நிரந்தர தடுப்பணை கட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை