உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கிருஷ்ண ஜெயந்தி வழிபாடுகோயில்களில் கோலாகலம்

கிருஷ்ண ஜெயந்தி வழிபாடுகோயில்களில் கோலாகலம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விருதுநகர் ரெங்கநாத சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு காலை முதல் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பாண்டியன் நகரின் முத்தால் நகர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு நடந்தது. மாலை உறியடி நிகழ்வு நடந்தது. சிறுவர்கள் கிருஷ்ணர் வேடமிட்டு ஊர்வலம் வந்தனர். * ராஜபாளையம் சாஸ்திரி நகர் கிருஷ்ணன் கோயில், சர்வ சமுத்திர அக்ரஹாரம் கிருஷ்ணர் கோயில், பெரிய மந்தை அருகே கிருஷ்ணர் கோயில், காந்தி கலை மன்றத்தில் மகாவன டிரஸ்ட் சார்பில் கீதை எழுத்து ஓவியம் கலை நிகழ்ச்சிகள், சத்திரப்பட்டி சேவா பாரதி சார்பில் சங்கர பாண்டியபுரம் ராமசாமி கோயிலில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிந்து போட்டிகள் பஜனை நடந்தன. சொக்கலிங்காபுரம் கிருஷ்ணன் கோயில், மீனாட்சிபுரம், கலங்கா பேரி எஸ். ராமலிங்காபுரம், சேத்துார் மேட்டுப்பட்டி சந்தான பாலகிருஷ்ணன் கோயில், சொக்கநாதன் புத்துார் கிருஷ்ணன் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு வழிபாடு பூஜைகள் அன்னதானம் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை