உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளி சாதனை

கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளி சாதனை

மதுரை: மதுரை அரவிந்தோ மீரா யுனிவர்சல் பள்ளியில் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இடையேயான எம்.எஸ்.எஸ்.சி., ஜோன் 6 தடகளப் போட்டிகள் நடந்தன. இதில் கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் உடற்கல்வி இயக்குனர் தசரதி தலைமையில் பங்கேற்று பரிசுகளைபெற்று சாதனை படைத்தனர். ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் 11ம் வகுப்பு மாணவர் மாணிக்கவேங்கை முதலிடம், 10ம் வகுப்பு மாணவர் காவிய குமார் 3வது இடம், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11ம் வகுப்பு ரோஷன் 3ம் இடம், உயரம் தாண்டுதல் மற்றும் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பிளஸ் 2 மாணவர் சூரிய நாராயணன் 3ம் இடம் பெற்றனர். இரண்டாம் நாளில் மாணவியருக்கான தடகளப் போட்டி நடந்தது. நீளம் தாண்டுதலில் 10ம் வகுப்பு தனுஜா 3ம் இடம், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11ம் வகுப்பு சிசாவர்த்தினி 2ம் இடம், 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11ம் வகுப்பு ராகஅம்ருதா 3ம் இடம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !