உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  முடங்கி கிடக்கும் அரசு துறைகள் : கிருஷ்ணசாமி பேச்சு

 முடங்கி கிடக்கும் அரசு துறைகள் : கிருஷ்ணசாமி பேச்சு

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்தும், மருத்துவமனையை தரம் உயர்த்த கோரியும் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அதன் தலைவர் கிருஷ்ணசாமி பேசியதாவது: இங்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சேதமான அரசு மருத்துவமனை கட்டடத்தை அகற்றி விட்டு சிறப்பு நிதி ஒதுக்கி புதிய கட்டடம் கட்டி, போதிய மருத்துவ வசதிகள் செய்து தர வேண்டும். டாக்டர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி பகுதிகளில் முறையான ரோடு, வாறுகால், குடிநீர், மயான வசதிகள் செய்து தர வேண்டும். உள்ளாட்சி அமைப்பு நிதிகள் முறையாக பயன்படுத்தப்படாமல் முறை கேடுகள் நடக்கிறது. அனைத்து அரசு துறை நிர்வாகமும் முடங்கி கிடக்கிறது. 2026ல் நம்முடைய ஆட்சி வரும். நுாறு நாள் வேலை திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை மத்திய அரசு விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ