உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேக விழா

சிவகாசி: திருத்தங்கல் மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. திருத்தங்கல் மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜன. 21 ல் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.தொடர்ந்து தினமும் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இந்நிலையில் நேற்று கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. யாக பூஜைக்கு பின்னர் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்