உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எலுமிச்சை கிலோ ரூ.120

எலுமிச்சை கிலோ ரூ.120

விருதுநகர்; விருதுநகர் மாவட்ட மார்க்கெட்டுகளில் எலுமிச்சை கிலோ ரூ.120 வரை விற்கப்படுவதால் கோடையில் அதை வாங்க வரும் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.தமிழக அளவில் எலுமிச்சை சாகுபடி குறைந்ததால் எலுமிச்சை பழத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.60க்கு விற்ற இளநீர், இந்தாண்டு ரூ.80 முதல் 100 வரை விற்கிறது. பல்வேறு பழங்களின் விலையும் அதிகரித்துள்ளதால் மக்கள் எலுமிச்சை பழம் வாங்கி வீடுகளில் ஜூஸ் குடித்து வந்தனர்.மழைக்காலங்களில் சாகுபடி நஷ்டத்தால் வெங்காயம் விலையேறுவது போல், இந்தாண்டு எலுமிச்சை சாகுபடி குறைவால் விலையேறியுள்ளது. கிலோ ரூ.120 வரை விருதுநகர் மார்க்கெட்டுகளில் விற்கிறது. ஏப். முதல் வாரத்தில் ரூ.100 தொட்ட பழத்தின் விலை, தற்போது ரூ.120 ஆகி உள்ளது.இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. அருகே ராமநாதபுரம் மாவட்டத்தில் கிலோ ரூ.200 வரை விற்கிறது. காரணம் அங்கு எலுமிச்சை சாகுபடியே கிடையாது. விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரங்களில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது.அதே போல் மதுரை பரவை மார்க்கெட்டில் இருந்தும் விருதுநகர் மார்க்கெட்டுகளுக்கு வருகிறது. இதனால் விலை ரூ.120 ஆக உள்ளது. இதுவே அதிகம். வைட்டமின் சி அதிகம் உள்ள எலுமிச்சை பழ ஜூஸ் கூட போட முடியாத அளவுக்கு அதன் விலை உயர்ந்துள்ளதே என நடுத்தர மக்கள் விழிபிதுங்கி பார்க்கின்றனர். ஒரு பழத்தின் விலை ரூ.10 முதல் 12 வரை விற்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை