கணவரின் கழுத்தை இறுக்கி கொன்ற மனைவிக்கு ஆயுள்
ஸ்ரீவில்லிபுத்துார்:கணவரை கொன்ற மனைவிக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், சாத்துார், சிந்தப்பள்ளியை சேர்ந்தவர் கற்பகராஜ், 26, கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி, 25. இத்தம்பதிக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. ராஜலட்சுமி அடிக்கடி மொபைல் போனில் பேசியதால், தம்பதி இடையே தகராறு நிலவியது. இந்நிலையில், 2023 செப்., 6ல், கற்பகராஜ் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவ்வழக்கில் ராஜலட்சுமி, மாமியார் பழனியம்மாள், 49, ஸ்வீட்டி, 22, அவரது கணவர் வேலாயுதம், 25, ஆகியோரை, சாத்துார் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜெயக்குமார் நேற்று, ராஜலட்சுமிக்கு ஆயுள் தண்டனை விதித்தும், மற்றவர்களை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தார்.