உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 7 வயது சிறுமிக்கு தொந்தரவு போக்சோவில்ௐ ஒருவர் கைது

7 வயது சிறுமிக்கு தொந்தரவு போக்சோவில்ௐ ஒருவர் கைது

விருதுநகர்: விருதுநகர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் சிறுமி தனது பாட்டியுடன் இருந்தார். எதிர்வீட்டை சேர்ந்த கிருஷ்ணநாராயணன் 42, வீட்டிற்கு அவரது உறவினர் வாங்கி கொடுத்த முருங்கைக்காய்களை கொடுக்க சென்றார். அப்போது அவர் சிறுமியை தனியறைக்கு அழைத்து சென்று அத்துமீறி உள்ளார்.மீண்டும் மாலை நேரம் சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் போது வீட்டிற்கு அழைத்து அத்துமீறினார். நேற்று காலை பாட்டியுடன் வாசலில் சிறுமி அமர்ந்திருந்த போது, எதிர்வீட்டு கிருஷ்ணநாராயணனை பார்த்து வீட்டிற்குள் சிறுமி பயந்து ஓடினார். சிறுமியிடம் இது குறித்து விசாரித்ததில், கிருஷ்ணநாராயணன் சிறுமியிடம் அத்துமீறியது தெரிந்தது. மகளிர்போலீசார் போக்சோவில் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை