கம்யூ., பெண் நிர்வாகி வீட்டிற்கு தீவைத்தவர் கைது
விருதுநகர் : விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்தவர் மா.கம்யூ., நகர குழு உறுப்பினர் ஜெயா 46. இவர் வீட்டில் ஜன. 19 இரவு வீட்டின் முன்பக்க கதவில் தீ பிடித்தது. இதை அறிந்து குடும்பத்தினருடன் சேர்ந்து தண்ணீரை ஊற்றி தீயைஅணைத்தனர். இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர பாண்டி 25,என்பவரை போலீசார் கைது செய்தனர்.