உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாரியம்மன் கோயில் மாசி பொங்கல் விழா

மாரியம்மன் கோயில் மாசி பொங்கல் விழா

திருச்சுழி; திருச்சுழி மாரியம்மன் கோயிலில் மாசி பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி வழிபட்டனர்.மாரியம்மன் கோயிலில் மார்ச் 6ல், கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் வெள்ளி, மயில், ரிஷப வாகனத்தில் வீதி உலா நடந்தது. நேற்று பொங்கல் விழா நடந்தது. பெண்கள் அம்மனுக்கு பொங்கல் இட்டு மாவிளக்கு ஏற்றினர். நேர்த்திக்கடனாக பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், பாதம் வைத்தும், கண் மலர் செலுத்தி வழிபட்டனர். திருச்சுழி சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை