உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மார்க்சிஸ்ட் கம்யூ., நடை பயணம்

மார்க்சிஸ்ட் கம்யூ., நடை பயணம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூ., நடைபயணம் நடந்தது.அருப்புக்கோட்டை புளியம்பட்டி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், மொழி திணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு, கூட்டாட்சி சிதைப்பு என மத்திய அரசுக்கு எதிராக மக்கள் சந்திப்பு நடை பயணம் நடந்தது. இதற்கு முன்னால் எம்.எல்.ஏ., பாலபாரதி தலைமை வகித்தார்.அவர் பேசுகையில், பா.ஜ., ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது. கேஸ் மானியம் கிடைப்பதில்லை. மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. என, பேசினார். புளியம்பட்டியில் இருந்து திருநகரம் வரை நடை பயணம் நடந்தது. மத்திய அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் முன்னாள் எம்.எல்.ஏ., வழங்கினார். மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ