உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சமுதாய கூடத்தில் திடக்கழிவு மேலாண்மை இயந்திரம் ம.தி.மு.க. எதிர்ப்பு

சமுதாய கூடத்தில் திடக்கழிவு மேலாண்மை இயந்திரம் ம.தி.மு.க. எதிர்ப்பு

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியம் பாப்பையநாயக்கர்பட்டி சமுதாய கூடத்தில் திடக்கழிவு மேலாண்மை இயந்திரம் வைக்கப்பட்டதற்கு ம.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிவகாசி தொகுதி எம்.பி.யாக இருந்தபோது பாப்பயநாயக்கர்பட்டி சமுதாயக்கூடம் கட்டப்பட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் இயந்திரங்களை பொருத்தி கழிவுகளை சுத்தம் செய்யும் பணியை ஊராட்சி நிர்வாகம் துவங்கியுள்ளது. இதற்கு ம.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இயந்திரத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் ஸ்ரீவில்லிபுத்துார் பி.டி.ஓ. சிவக்குமாரை சந்தித்து நேரில் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை