உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி.,யில் மருத்துவ முகாம்

ஸ்ரீவி.,யில் மருத்துவ முகாம்

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் இதய பரிசோதனை முகாம் மங்காபுரம் இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.சங்கத் தலைவர் ஜெயராஜ் தலைமை வகித்தார். ரோட்டரி ஆளுநர் முத்து, முன்னாள் துணை ஆளுநர் மயில் பாலசுப்பிரமணியன், முகாமினை துவக்கி வைத்தனர்.காமராஜர் இதய பரிசோதனை அமைப்பு, திருநெல்வேலி காவேரி மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் இதய பரிசோதனை செய்தனர். முகாமில் ரோட்டரி நிர்வாகிகள் சிவக்குமார் ராஜா, ஜெகநாதன், முத்துராமலிங்க குமார், உதவி தலைமை ஆசிரியர் பரமேஸ்வரன், ஆசிரியர் ரமேஷ்குமார் கோபி உட்பட ரோட்டரி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை