மேலும் செய்திகள்
ஏ.ஐ.டி.யு.சி ஆர்ப்பாட்டம்
19-Sep-2025
ராஜபாளையம், செப். 29--ராஜபாளையம் ஏ.ஐ.டி.யு.சி மில் தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் ரவி தலைமை வகித்தார். செயலாளர் விஜயன் வேலை அறிக்கையை முன்வைத்து பேசினார். கூட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் முருகன், சங்க நிர்வாகிகள் ரமேஷ், ராஜபாண்டி, செந்தூர்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பஞ்சாலை நிர்வாகங்கள் 20 சதவீதத்திற்கு குறையாமல் போனஸ் வழங்க வேண்டும். பயிற்சி தொழிலாளர்களுக்கு தின சம்பளம் ரூ.544, வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். 480 நாள் பணிபுரிந்தவர்கள் நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
19-Sep-2025