உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாட்சியாபுரம் ரயில்வே பாலம் நவம்பரில் பயன்பாட்டிற்கு வரும் அமைச்சர் தகவல்

சாட்சியாபுரம் ரயில்வே பாலம் நவம்பரில் பயன்பாட்டிற்கு வரும் அமைச்சர் தகவல்

சிவகாசி: சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் நவ. மாதம் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். சிவகாசி விஸ்வநத்தம் மீன் மார்க்கெட்டில் மாநாட்டுக்கூடம் அமைய உள்ள இடத்தையும், சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிகளையும் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார். பின் அவர் கூறியதாவது: சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே பால பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. திட்ட காலத்திற்கு 3 மாதங்கள் முன்னதாகவே நவ. மாதம் பயன்பாட்டிற்கு வரும் வகையில் பணிகள் துரிதமாக நடக்கிறது. திருத்தங்கலில் ரூ.45 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு விரைவில் அரசாணை வெளியிடப்பட உள்ளது. சிவகாசி சுற்றுச்சாலை திட்டத்தில் முதற்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்டமாக ரூ.173 கோடி மதிப்பிலான பணிகளுக்கு விரைவில் ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட உள்ளது. தொழில் நகரான சிவகாசியில் கூட்டங்கள் நடத்துவதற்கான நவீன வசதிகளுடன் ரூ.15 கோடியில் மாநாட்டு கூடம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !