உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புதிய கட்டடப் பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

புதிய கட்டடப் பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

சாத்துார்; சாத்துார் அருகே புதிய கட்டடப் பணிகளுக்கு அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.கோல்வார்பட்டியில் ரூ.30 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம், இ.முத்துலிங்கபுரத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் நியாய விலை கடை, திருவிருந்தான் பட்டியில் ரூ.16.25 லட்சம் மதிப்பில் மேல்நிலை குடிநீர் தொட்டி, ஆவுடையாபுரத்தில் நபார்டு வங்கி நிதியில் ரூ.34.23 லட்சம் மதிப்பில் புதிய மேல்நிலைப் பள்ளி கட்டடம், அப்பைய நாயக்கன்பட்டியில் ரூ.8 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகளுக்கு நேரில் சென்று அடிக்கல் நாட்டினார்.அவருடன் வருவாய்த்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ