உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆண்டாளை தரிசித்த அமைச்சர்

ஆண்டாளை தரிசித்த அமைச்சர்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று தமிழக செய்தி, விளம்பரம், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சுவாமிநாதன் சுவாமி தரிசனம் செய்தார்.நேற்று மாலை 4:45 மணிக்கு கோயிலுக்கு வந்த அமைச்சர் சுவாமிநாதனை, தாசில்தார் செந்தில்குமார் வரவேற்று கோயிலுக்கு அழைத்துச் சென்றார். கோயில் பட்டர்கள் வரவேற்றனர். ஆண்டாள் சன்னதி, ஆண்டாள் அவதார ஸ்தலம், வடபத்ர சயனர் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார்.பின்னர் தமிழக அரசின் முத்திரை சின்னமான ராஜகோபுரத்தை தரிசித்தபோது, ஐயப்ப பக்தர்கள் செல்பி எடுத்து கொண்டனர். இதனையடுத்து கோயிலில் இருந்து புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை