உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரி கைகளில் பணம் * வைரலான வீடியோ

மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரி கைகளில் பணம் * வைரலான வீடியோ

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பெண் செயற்பொறியாளர் ஒருவர் கைகளில் பணத்தை எண்ணும் வீடியோ வைரலானது சர்ச்சையை ஏற்படுத்தியது. சிவகாசியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் கோட்ட செயற் பொறியாளராக பணிபுரிபவர் பத்மா. இவர் அலுவலக அறையின் சேரில் அமர்ந்தபடி கைகளில் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுகளை எண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அரசு அலுவலகத்தில் தனது அறையிலேயே உயரதிகாரி ஒருவர் இவ்வளவு பணத்தை வைத்திருக்கலாமா, அவர் கையில் வைத்துள்ளது லஞ்ச பணமா அல்லது அலுவலகத்திற்கு உரிய பணமா என்ற கேள்வி எழுந்தது. வீடியோ விவகாரம் குறித்து சம்மந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து செயற்பொறியாளர் பத்மாவை அலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க முயன்ற போது அவர் பதில் அளிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ