உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இரு மகள்களுடன் தாய் ரயில் முன் விழுந்து தற்கொலை

இரு மகள்களுடன் தாய் ரயில் முன் விழுந்து தற்கொலை

விருதுநகர்:விருதுநகர் அருகே பட்டம்புதுாரில் தாய் ராஜவள்ளி 60, சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்ததாலும், வறுமை காரணமாகவும் வாய் பேச முடியாத தனது மகள்களான மாரியம்மாள் 30, முத்துப்பேச்சி 25, ஆகியோருடன் சேர்ந்து ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் பட்டம்புதுார் காலனியை சேர்ந்தவர் ராஜவள்ளி. இவருக்கு சிறுநீரக குறைபாடு இருந்தது. கணவர் தர்மர்.இவர்களுக்கு மாரியம்மாள் , முத்துமாரி 27, முத்துப்பேச்சி என மூன்று மகள்கள். ராஜவள்ளி தவிர மற்ற நால்வரும் கூலித் தொழில் செய்து வந்தனர். இதில் மாரியம்மாள், முத்துப்பேச்சி இருவரும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். ராஜவள்ளி சிறுநீரக நோய் பாதிப்பால் அவதிப்பட்டார். நேற்று மாலை 5:30 மணிக்கு பட்டம்புதுாரில் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி சென்ற ரயில் முன்பு விழுந்து தாய் ராஜவள்ளி, மகள்கள் மாரியம்மாள், முத்துபேச்சி என மூவரும் தற்கொலை செய்து கொண்டனர். கணவர் தர்மர், இளைய மகளான முத்துமாரி கூலி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்குள் இந்த சம்பவம் நடந்தது. தர்மர் உடல்களை அடையாளம் கண்டார். தாய் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் வறுமை காரணமாக மகள்களுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாமல் திணறி வந்ததால் இந்த முடிவுக்கு அவர்கள் வந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. துாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை