மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
8 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
8 hour(s) ago
சிவகாசி: பெட்ரோல், டீசல், கியாஸ் விலை குறைக்காமல் மலிவு விலை அரிசியால் பயனில்லை என சிவகாசியில் மாணிக்கம் தாகூர் எம்.பி., கூறினார்.சிவகாசியில் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இண்டியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார், அஜித் சிங் ஆகியோரின் இரு கட்சிகள் விலகிய நிலையில் அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், மஹராஷ்ராவில் இருந்து முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகள் இணைந்துள்ளன. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானத்துறையை பார்த்து பயப்படுபவர்கள் இண்டியா கூட்டணியை விட்டு வெளியேறுகின்றனர்.ராமர் கோயில் திறக்கப்பட்ட காலத்தில், ஹிந்தி பேசும் மாநிலங்களில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகள் பா.ஜ., விற்கு ஆதரவாக உள்ளது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை குறைக்காமல் மலிவு விலை அரிசியால் மக்களுக்கு பலனில்லை, என்றார்.
8 hour(s) ago
8 hour(s) ago