தெருவில் தேங்கும் கழிவுநீர் முள்ளிக்குளம் மக்கள் அவதி
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியம் முள்ளிக்குளம் ஊராட்சியில் தெருக்களில் தேங்கும் கழிவு நீரால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருவதை தவிர்க்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இங்குள்ள பல்வேறு தெருக்களில் பேவர் பிளாக், சிமென்ட் ரோடுகள் போடப் பட்டுள்ள நிலையில் வாறுகால்களில் கழிவு தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. நடுத்தெருவில் தேங்கிய கழிவு நீரை அப்பகுதியில் வசிக்கும் மக்களே அவ்வப்போது சுத்தம் செய்யும் நிலை உள்ளது. எனவே ஊராட்சியில் அனைத்து தெருக்களிலும் முறையாக துப்புரவு பணி மேற்கொண்டு கழிவு நீர் தேங்காத நிலையை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் கூறுகையில், கழிவுநீர் தேங்கிய தெருவில் உடனடியாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இங்கு வாறுகால் உயர்த்திக் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.