உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நிர்மலா தேவி வழக்கு: ஏப்.,29ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

நிர்மலா தேவி வழக்கு: ஏப்.,29ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அக்கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018ல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் இருதரப்பு வாதங்கள், முடிந்தநிலையில், இன்று (ஏப்.,26) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று நீதிமன்றத்தில் முருகன், கருப்பசாமி ஆகியோர் ஆஜராகினர்; ஆனால் நிர்மலா தேவி ஆஜராகவில்லை. இதனையடுத்து ஏப்.,29ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை