உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நேரடி பஸ்கள் இல்லை: மக்கள் அவதி

நேரடி பஸ்கள் இல்லை: மக்கள் அவதி

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து தொலைதூர நகரங்களுக்கு நேரடி பஸ்கள் இயக்கப்படாததால் தீபாவளி முடிந்து திரும்பும் மக்கள் மிகுந்த சிரமத்துடன் பஸ்களில் நின்று கொண்டே பயணிக்கும் நிலைக்கு ஆளாகினர். ஸ்ரீவில்லிபுத்துாரைச் சேர்ந்த ஏராளமான மக்கள் சென்னை, திருப்பூர், கோவை, பெங்களூரு உட்பட தொலைதூர நகரங்களிலும், மதுரை, தேனி, மூணாறு, தஞ்சை, திருச்சி உட்பட தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் வசித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் வந்த இவர்கள் நேற்று காலை முதல் மீண்டும் தங்கள் ஊருக்கு திரும்பிச் செல்ல பஸ் ஸ்டாண்டில் குவிந்தனர். செங்கோட்டை, ராஜபாளையம், திருநெல்வேலி பகுதிகளில் இருந்து வந்த பஸ்கள் முழு அளவில் நிரம்பி வழிந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பயணிகளுக்கு உட்கார இடம் கிடைக்காமல் நின்று கொண்டே பயணிக்கும் சிரமத்திற்கு ஆளாகினர். இனிவரும் காலங்களில் தொடர் விடுமுறை, பண்டிகை விடுமுறை நாட்களில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து புறப்பட்டு தொலைதூர நகரங்களுக்கு பஸ்கள் இயக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ