அழகாபுரியில் இல்லை நிழற்குடை வெயிலில் தவிக்கும் பயணிகள்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து மதுரை செல்லும் ரோட்டில் உள்ள அழகாபுரியில் நிழற்குடை இல்லாமல் கோடை வெயிலுக்கு பயணிகள் தவித்து வருகின்றனர்.அழகாபுரியை சுற்றி பல்வேறு கிராமங்கள் உள்ளது. இங்குள்ள மக்கள் தினமும் அழகாபுரி வந்து அங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு பயணித்து வருகின்றனர். இங்கு ரோட்டில் இரு புறமும் மரங்கள் இருந்த நிலையில் ரோடு விரிவாக்கத்திற்காக அவை அகற்றப்பட்டுள்ளது. நிழற்குடையும் இடிக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் நிழற்குடை இல்லாமல் பயணிகள் வெயிலில் தவித்து வருகின்றனர். ரோட்டின் இருபுறமும் நிழற்குடை அமைத்து தர வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.