சேத்துாரில் நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள்
சேத்துார் : மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய ராஜபாளையம், தேவதானம், சேத்துார் பகுதிகளில் நீர் வரத்து அதிகம் உள்ளதால் நெல் சாகுபடி பரப்பு அதிகம். இந்நிலையில் கோடை முடிவடையும் நிலையில் முதல் போக சாகுபடிக்கு பிராக்குடி, நடுவக்குளம், சிலம்பநேரி கண்மாய் பாசன பகுதி விவசாயிகள் நெல் நடவு பணிகளை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக வட மாநில ஆண் தொழிலாளர்களை பாரம்பரிய நெல் நடவு பணிகளில் விவசாயிகள் ஈடுபடுத்தி வருகின்றனர். கூலி குறைவு என்பதால் விவசாயிகளும் இத் தொழிலாளர்களை அதிகம் நாடுகின்றனர். இதுகுறித்து விவசாயி குமார்: தற்போது நெல் நடவு பணிக்கு கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. இருக்கும் ஆட்களை வைத்து துவக்கினாலும் ஏக்கருக்கு 20 நபர் வீதம் ரூ. 6 ஆயிரம் கேட்கின்றனர். வடமாநில தொழிலாளர்கள் ஏக்கருக்கு 500 குறைத்து கூலி கொடுத்தாலும் பாரம்பரிய தொழிலாளர்களிடம் நாற்று நடவு செய்வதில் பாதி மட்டுமே ஆவதுடன் நெல் நாற்றுகள் இடையே சீரான இடைவெளி காற்றோட்டம் அதிக மகசூல் பெற முடியும். தொடர்ந்து பற்றாக்குறை ஏற்படும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு மாற்றாக வடமாநில தொழிலாளர்கள் இருப்பதுடன் செலவும் குறைவதால் அவர்களின் தேவை அதிகரிக்கிறது., என்றார்.