மாவட்டத்தில் ஊட்டச்சத்து வேளாண் இயக்கம் துவக்கம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து வழங்கும் விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்து ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யவும், உழவர்களின் வருமானத்தை உயர்த்தும் வகையில் அரசு மூலம் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்னும் புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது.கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: இத்திட்டத்தின் கீழ் வேளாண்துறை மூலமாக மரத்துவரை, காராமணி, அவரை வகை விதை தொகுப்பு, தோட்டக்கலைத்துறை மூலம் வீட்டுத்தோட்டங்களில் காய்கறி வளர்ப்பதை ஊக்குவிக்க தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் அடங்கிய தொகுப்பும், பப்பாளி, கொய்யா, எலுமிச்சை ஆகிய மூன்று வகையான பழச்செடிகள் அடங்கிய தொகுப்பும் நுாறு சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.இதில் பயன்பெற உழவர் செயலியில் பதிவேற்றம் செய்தவர்களுக்கும், tnhorticulture.tn.gov.inஎன்ற வலைத்தளத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் விபரங்கள் அறியலாம், என்றார்.