மேலும் செய்திகள்
தங்கள் குறைகளை சொல்ல விவசாயிகளுக்கு அழைப்பு
26-Sep-2024
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் முதிய தம்பதி இருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.விருதுநகர் அருகே எரிச்சநத்தம் புதுப்பட்டியை சேர்ந்த அனந்தப்பன் 62. சாந்தாதேவி 60, தம்பதியர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்திற்கு வந்த போது, மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். அதற்குள் போலீசார் தடுத்து தண்ணீர் ஊற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அவர்கள் கூறியதாவது: ஊரில் தங்களுக்கு சொந்தமான 1 ஏக்கர் 67 சென்டில் உள்ள நிலத்தில் 62 சென்டை 2007ல் வருவாய் கிராம உதவியாளர் ஒருவருக்கு எழுதி கொடுத்தோம். மீதமுள்ள ஒரு ஏக்கரை தற்போது விற்க முயற்சிக்கும் போது மொத்த பட்டாவும் அவரது பெயரில் உள்ளதாக தெரிகிறது. இதனால் நிலத்தை விற்க முடியவில்லை. இது குறித்து கலெக்டரிடம் பல மனு அளித்துள்ளோம். எந்த நடவடிக்கையும் இல்லை, என்றனர்.
26-Sep-2024