2024ல் ஒன்றரை டன் குட்கா பறிமுதல் ரூ.1.06 கோடி அபராதம்
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 2024ல் நடந்த குட்கா சோதனையில் 403 கடைகள், 44 வாகனங்களில் இருந்து ஒன்றரை டன் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1.06 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உணவுப்பாதுகாப்புத்துறை, போலீசார் இணைந்து அமைக்கப்பட்ட 6 குழுக்கள் மூலம் பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகே உள்ள கடைகளில் குட்கா சோதனை செய்யப்பட்டது. 2024 ஜன. 1 முதல் டிச. 31 வரை 831 முறை குட்கா பொருட்கள் உள்ளதா என சோதனை செய்யப்பட்டது.அதில் 403 கடைகள், 44 வாகனங்களில் இருந்து 1531 கிலோ 91 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 403 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. இதில் 403 கடைகள், 44 வாகனங்களிடமிருந்து ரூ. 1 கோடியே 6 லட்சத்து 16 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 2025 ஜன. 1 முதல் ஜன. 4 வரை 10 குழுக்களின் ஆய்வில் 6 கடைகளில் இருந்து 16 கிலோ 275 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, ரூ. 1.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.