உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோட்டோரத்தில் திறந்த வெளி கிணறு வாகன ஓட்டிகள் அச்சம்

ரோட்டோரத்தில் திறந்த வெளி கிணறு வாகன ஓட்டிகள் அச்சம்

சிவகாசி : சிவகாசி அருகே ஊராம்பட்டியில் ரோட்டோர திறந்தவெளி கிணற்றினால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். சிவகாசி அருகே ஊராம்பட்டியில் எம்.துரைச்சாமிபுரம் செல்லும் வழியில் ரோட்டோரத்தில் திறந்த வெளி கிணறு உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை பயன்பாட்டில் இருந்த இந்த கிணறு தற்போது பயன்பாட்டில் இல்லை. கிணற்றின் அருகே கோவில், குடியிருப்புகள், பள்ளிகள் உள்ளன. இதனால் எப்பொழுதுமே மக்கள் நடமாட்டம் இருக்கும். தவிர வளைவுப் பகுதியில் கிணறு உள்ளதால் வாகனங்களில் வருபவர்கள் சிறிது கவனம் சிதறினாலும் கிணற்றில் விழ வாய்ப்புள்ளது. இதனால் பெரிய அசம்பாவிதம் ஏற்படும். இப்பகுதியில் தெருவிளக்குகளும் இல்லாததால் இரவில் டூவீலரில் வருபவர்கள் அச்சத்துடனே வர வேண்டி உள்ளது. எனவே கிணற்றிற்கு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !