உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் செயல்படாத ஆக்ஸிஜன் உற்பத்தி பிளான்ட்

அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் செயல்படாத ஆக்ஸிஜன் உற்பத்தி பிளான்ட்

விருதுநகர்: விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கொரோனா காலக்கட்டத்தில் மத்திய அரசின் நிதியில் இருந்து அமைக்கப்பட்ட தானியங்கி ஆக்ஸிஜன் உற்பத்தி பிளான்ட் தற்போது செயல்பாடாமல் உள்ளது.விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு பரிசோதனை, சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிகள், குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்குள்ள மகப்பேறு பிரிவில் கொரோனா காலகட்டத்தில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு மூச்சுத்திணறலை சரிசெய்து சிகிச்சை அளிப்பதற்காக 2019- - 2020ல் மத்திய அரசின் நிதியின் மூலமாக காற்றில் இருந்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் தானியங்கி பிளான்ட் அமைக்கப்பட்டது.இந்த பிளான்ட் அவ்வப்போது பழுது ஏற்பட்டு செயல்படாமல் போனதால் மருத்துவமனையில் இருந்த இரண்டு திரவ ஆக்ஸிஜன் பிளான்டில் ஒன்றை மகப்பேறு பிரிவிற்கு மாற்றம் செய்யும் பணிகள் ரூ. 18 லட்சத்தில் மருத்துவமனை நிர்வாகத்தால் செய்து முடிக்கப்பட்டது. இதனால் தற்போது மகப்பேறு பிரிவிற்கு தடையில்லா ஆக்ஸிஜன் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசின் நிதியில் அமைக்கப்பட்ட தானியங்கி ஆக்ஸிஜன் உற்பத்தி பிளான்ட் தற்போது செயல்படாமல் இருப்பதால் அரசின் நிதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை டீன் ஜெயசிங் கூறியதாவது: மகப்பேறு பிரிவில் உள்ள தானியங்கி பிளான்டின் பழுதுகளை நீக்கும் பணிகள் துவங்கப்படவுள்ளது. இப்பணிகளை விரைந்து முடித்து மீண்டும் தானியங்கி ஆக்ஸிஜன் உற்பத்தி பிளான்ட் முழு செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை